நைஜீரியாவில் ஷியா பிரிவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷியா முஸ்லீம் மதகுருவான இப்ராஹிம் ஜாக்ஸாகி மற்றும் அவரது மனைவியை விடுவிக்கக் கோரி நைஜீரியாவின் இஸ்லாமிய இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்துபோனவரின் உடலை காவல்துறையினர் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றிச்செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும் பதிலுக்கு போராட்டக்காரர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, காவல்நிலையம் ஒன்றுக்கும் தீ வைத்தனர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
Discussion about this post