சிரியாவில் நடைபெற்ற ராக்கெட் விபத்தில் குறைந்தபட்சமாக 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்…
சிரியாவின் அலெப்போவில் திடீரென்று நிகழ்ந்த ராக்கெட் லாஞ்சர் விபத்தில் பொதுமக்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சிரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. துப்பாக்கிகள் மூலம் ஏவப்படக்கூடிய இந்த ராக்கெட்டுகள் அலெப்போ மற்றும் மன்யான் பகுதிகளிலிருந்து சுடப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். அலெப்போ பல்கலைக்கழக மருத்துவமனையில் காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் தாக்குதலுக்கு ஆளான அனைவருமே சாதாரண குடிமக்கள் என்றும் எட்டுக்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்திருப்பதாகவும் அலெப்போ பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Discussion about this post