நடிகர் சிவகுமார் சமீபகாலமாக செல்பி எடுக்க வந்தவர்களின் மொபைல் போனை தட்டி விடுகிறார் என்ற சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஏற்கனவே மொபைல் போனை தட்டிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டு, ஒரு புதிய போனை வாங்கி கொடுத்து அந்த சலசலப்பு அடங்குவதற்குள் மறுபடியும் மற்றுமொரு இளைஞரின் போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து சிவகுமார் மகன் கார்த்தி கூறும் போது ஒருவர் அனுமதி இன்றி செல்பி எடுப்பது தவறான விஷயம், அதை இன்னும் யாரும் புரிந்துகொள்வது இல்லை.
இதுவொரு சாதாரண விஷயம், இந்த விஷயத்திற்காக ‘மீ-டூ’ அளவுக்கு விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Discussion about this post