முன்னாடியெல்லாம் ஒரு விஷயம் வைரல் ஆவதற்கு பல மாதங்கள் கூட ஆகும்.ஆனால் இன்று சமூகவலைதளங்களில் சாதாரண விஷயம் கூட ஒரே நாளில் மீம்ஸ்களால் பேமஸ் ஆகி விடுகிறது.மீம்ஸ் என்றாலே வடிவேலு மீம்ஸ் தான் நாம் அதிகமாக பார்த்திருக்கிறோம் .தற்போது சிவா,சதீஷ் மீம்ஸ்கள் பயங்கர வைரலாகி வருகிறது. சமீபத்தில் Mr.Local திரைப்படத்தின் டீசர் வெளியானது.டீசரின் முடிவில் சிவகார்த்திகேயன் ரொம்ப கஷ்டப்பட்டு ‘கீர்த்தனா…’ என்று பல பில்டப்களை கொடுத்து கூப்பிடுவது போலவும், அதற்கு சதீஷ் பின்னாடி நின்று கொண்டு நக்கலாக ‘ஹே…கூப்டுறாங்க..வா..’ என்று கலாய்ப்பது போலும் காட்சி அமைந்திருந்தது.
அந்த காட்சியை வைத்து தற்போது மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் தெறிக்கவிடுக்கின்றனர்.அந்த ஒரு காட்சிக்கு மட்டும் கிட்டதிட்ட 30க்கும் மேற்பட்ட மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.அதில் mom and me, last benchers and class teachers, break up guys and friend, brain and stomach என அனைத்து டாபிக்கிலும் வேற லெவல் செய்கின்றனர்.
இப்படி வைரலாகி வரும் மீம்ஸ்களை நடிகர் சதீஷ் தவறாமல் தனது டுவிட்டர் பக்கத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
வைரலாகி வரும் மீம்ஸ்கள் கீழே:
Discussion about this post