கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக மதுரையில் அமைக்கப்பட்டு வரும் சிலப்பதிகாரம் பூங்காவின் திறப்பு விழா, ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதில், சிலப்பதிகாரத்தில் வாழ்த்துப் பாடலாக உள்ள 3 காண்டங்களில் இருந்து 30 காதைகளின் சுருக்கம் கல்வெட்டாக வைக்கப்பபட்டுள்ளது. பூங்காவின் நடுவில் பிரம்மாண்டமான சிலம்பு சிற்பமும் அமையப் பெற்றுள்ளது. பின்னணியில் கண்ணகி, கோவலன், மாதவி, சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள் ஆகியோரின் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கடம்பு, வாகை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன.
Discussion about this post