திண்டுக்கல் நிலக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார். அப்போது பேசிய அவர், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 13 கோடி ரூபாய் மதிப்பில் 32 ஆயிரத்து 881 மிதிவண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post