தமிழ்நாட்டில் வேகமெடுத்தும் வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் ஐந்தாயிரத்து 400 தாண்டியுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 32 பேர் உள்பட மாநிலம் முழுவதும் புதிதாக ஐந்தாயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஆயிரத்து 752 பேருக்கும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 688 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதில் மூவாயிரத்து 289 பேர் ஆண்கள் என்றும், இரண்டாயிரத்து 152 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆயிரத்து 752 பேரும், கோவை மாவட்டத்தில் 473 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 465 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 213 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 195 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 33 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் ஆயிரத்து 890 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 88 ஆயிரத்து 135 பேருக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Discussion about this post