சிங்கப்பூர் ஓபன் பேட்மின்ட்டன் போட்டியில் பிவி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 9ஆம் தேதி சிங்கப்பூரில் துவங்கிய பத்தாவது சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி.சிந்து சீனாவின் கய் யன்யான்-ஐ 21-13, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதனையடுத்து சனிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நஸோமி ஒக்குஹரா -ஐ பிவி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
Discussion about this post