சிவகங்கையில் தேசிய கீதம் பாடி சமத்துவ பொங்கலை கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கருஞ்சுத்தி கிராமத்தில் மாட்டுப்பொங்கலன்று ஊர் திடலில் இந்துக்கள்,கிறித்தவர்கள் ,முஸ்லிம்கள், என அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் ஒன்று சேர்ந்தனர்,அதனைத்தொடர்ந்து சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்து நமது பாரம்பரிய முறைப்படி மண் பானையில் புத்தரிசி இட்டு பொங்கலோ பொங்கல் என்று பெண்கள் குலவையிட்டதுடன்,தேசிய கீதம் பாடி சமத்துவ பொங்கலை மனநிறைவாக கொண்டாடினர்.
Discussion about this post