விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சிம்டான்காரன் பாடல் வரிகள் டிடிவி தினகரனின் தேர்தல் முறைகேடுகளையும் அவரது சின்னத்தையும் கிண்டல் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சிம்டான்காரன் என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் தொடக்கத்தில் “மக்கரு, குக்கருமா” போய் தரைல உக்காருமா என்ற வரிகளை விஜய் பாடுகிறார். அமமுக டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்றார்.
20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி, குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதையும் மக்களின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. ”மக்கரு, குக்கருமா” என்றால் பழுதான குக்கர் என்றும் அதை நம்பிய மக்கள் தரையில் தான் உக்கார வேண்டும் என்ற தொனியில் இந்த பாடலை விஜய் படத்தில் பாடியுள்ளார். டிடிவி தினகரனின் தேர்தல் முறைகேடு லீலைகள் சினிமா பாடல் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிம்டான்காரன் பாடல் வரிகளுக்கு என்ன பொருள் என பலரும் கேள்வி எழுப்பி வரும் வேளையில் டிடிவி தினகரன் குறித்து இந்த பாடலில் கிண்டல் செய்திருப்பது வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.
Discussion about this post