சிலி நாட்டில் ரயில் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், ரயில் கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டங்கள் குறைந்திருந்த நிலையில் ஆன்டோபகஸ்டோ, கான்செப்சியன் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டத்தின் போது, அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன. சாலை தடுப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறை தொடர்பாக 283 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post