சிக்கிம் முதலமைச்சராக சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம்சிங் தமாங் பதவியேற்றுக் கொண்டார்.
சிக்கிமில் மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 இடங்களில் 17 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பி.எஸ்.கோலே என்று அழைக்கப்படும் பிரேம்சிங் தமாங் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு ஒரு ஊழல் வழக்கில் பிரேம்சிங் தமாங் சிறை தண்டனை அனுபவித்ததால் இதுகுறித்து சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் சட்ட ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் தமாங்கை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று காலை காங்டாக் பால்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் சிக்கிம் முதலமைச்சராக பிரேம்சிங் தமாங் பதவி ஏற்றார். சூறாவளி பிரசாரம் மேற்கொள்வதற்காக சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post