சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதி நவீன ஆய்வக சேவையை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பராமரிக்க, நவீன வசதிகளுடன் கூடிய 30 லட்சம் ரூபாய் செலவில் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், ஜோக்கர்கள் மூலம் குழந்தைகளை மகிழ்விப்பதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடத்துவதற்கு விலக்கு கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.
Discussion about this post