நடிகை ஸ்ருதி ஹாசன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 7 ஆம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமானார்.ஆனால் இவர் நடிகையாக
அறிமுகமாவதற்கு முன்னரே பாடகியாக அறிமுகமாகிவிட்டார்.இவரின் தந்தை கமல்ஹாசன் என்றாலும், தனது தனித்திறமையின் மூலமே தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இவரின் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.அதில்’ காதல் அல்லது திருமணம் உறவு சரிவரவில்லை என்றால் அதை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
பின்பு பெற்றோர்களின் பிரிவை பற்றி பேசுகையில், மற்றவர்களுக்கு தான் இது செய்தி ஆனால் தங்கள் குடும்பத்துக்கு அல்ல. இருவரும் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள்.எனவே இருவரும் பிரிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி .கமலும் , சரிகாவும் எனக்கு பெற்றோர்களாக இருப்பதற்கு முன்பு தனிப்பட்ட விருப்பு, வெறுப்புடைய நபர்கள்’ என்று கூறியுள்ளார்.