வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல், முழுமையான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்று புதுவை அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளார்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். மக்களைப் பற்றியோ மாநில வளர்ச்சியைப் பற்றியே சிறிதும் கவலை கொள்ளாமல் நாடாளுமன்ற தேர்தலிலேயே ஆளும் காங்கிரஸ் கவலை கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.