சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிக்கரை சிவன் கோவிலைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கத் தமிழக அரசுக்குத் தொல்லியல் துறை பரிந்துரைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது முடிக்கரை சிவன் கோவில். நூற்றுக்கு மேற்பட்ட பழங்காலக் கல்வெட்டுகளோடு , வரலாற்றுச் சின்னமாகப் பார்க்கப்படும் இந்தக் கோவில், தற்போது 2 அடி வரை பூமிக்குள் புதைந்து சிதிலமடைந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கோவிலைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனத் தொல்லியல் துறை, தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தொல்லியல் துறை நடத்திய ஆய்வின் முடிவில், இந்தக் கோவிலின் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.
Discussion about this post