மக்களின் தீர்ப்பை சிவசேனா ஏற்க மறுக்கிறது – தேவேந்திர பட்னாவிஸ்

மக்களின் தீர்ப்பை சிவசேனா ஏற்க மறுப்பதாக மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலமைச்சர் பதவியை வகிப்பது யார் என்பது குறித்து இழுபறி நீடித்தது. இந்தநிலையில் அதிரடி திருப்பமாக பாஜகவுடன், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் இணைந்து பதவியேற்றனர். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

கூட்டணி குறித்து விளக்கமளித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ், மக்களின் தீர்ப்பை சிவசேனா ஏற்க மறுப்பதாக தெரிவித்தார். மாநிலத்தில் நிரந்திர ஆட்சி வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக அஜித் பவார் விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version