இலங்கையில் சரக்கு கப்பல் கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து, அழகு சாதன பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி MV XPRESS PEARL என்ற சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் புறப்பட்டுச் சென்றது.
கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பலில், கடந்த 21ம் தேதி கப்பலில் திடீர் தீ விபத்து நேரிட்டது.
கப்பலில் இருந்த ரசாயன பொருட்கள் தீயில் மளமளவென எரிந்ததால், அப்பகுதியே கரும்புகை மூட்டமாக காட்சியளித்தது.
தகவலறிந்த இலங்கை கடற்படையினர், கப்பலில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தீக்காயமடைந்த இந்தியர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
MV XPRESS PEARL சரக்கு கப்பலில் இருந்து 8 கண்டெய்னர்கள் கடலில் விழுந்த நிலையில், கப்பலில் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால், இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post