டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி அரசுக்கு சொந்தமான அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஷீலா தீட்ஷித்தின் உடல் வைக்கப்பட்டு, யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகாம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிரியங்கா காந்தி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். ஷீலா தீட்சித்தின் மறைவையொட்டி டெல்லி அரசு இரண்டு நாள் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
Discussion about this post