ஆவிகளின் தோழி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் Deb Mathias. தன்னுடன், 100 ஆவிகள் ஒரு வீட்டில் தங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் 13 ஆவிகள் தினமும் அவர் வைத்திருக்கும் அந்த பாழடைந்த வீட்டிற்கு வருவதாகவும் கூறுகிறார்.
கனடாவின் Regina நகரில் வசிக்கும் Deb Mathias ஆவிகளை கண்டுபிடிப்பதற்காக ஒரு கருவியை வைத்திருக்கிறார். அதன் உதவியோடு வாரத்தின் 7 நாட்களிலும் ஆவிகள் வீட்டிற்கு வருவதை அவர் பதிவு செய்கிறார்.
இந்த பெண்ணால் ஆவிகளை உணர மட்டும் இல்லையாம், அவற்றை பார்க்கவும், கேட்கவும் முடியும் என்று ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் பகிர்ந்துகொள்கிறார்.
வாரம் ஒரு முறை சுற்றுலாப்பயணிகளுக்காக இந்த ஆவிகள் இருக்கும் வீட்டை திறந்து விடுகிறார் Deb Mathias.
அதிலிருந்து வரும் பணத்தை கொண்டு ஆவிகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி அந்த வீட்டிலேயே வைத்து விடுகிறார்.
அந்த வீட்டில் ஆவிகளுக்கு பிடித்த ஒரு பழைய ரேடியோ, பாலே நடனம் ஆடுவதற்கேற்ற ஷூக்கள் மற்றும் படங்களையும் வைத்துள்ளார் அவர்.
ஆவிகள் இருப்பது உண்மையா இல்லையா என்ற கேள்விகள் ஆண்டு, ஆண்டு காலமாய் இருந்து வந்தாலும். ஆவிகளுடன் வாழ்ந்து வரும் Deb Mathias ஒரு விசித்திர பெண்மணியாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறார்.
Discussion about this post