இந்தியன் 2 படம் தாமதத்திற்கு லைக்கா நிறுவனமே காரணம் என, இயக்குநர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை முடித்துக் கொடுக்காமல், இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, லைக்கா தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள இயக்குநர் சங்கர், உண்மைகளை மறைத்து லைக்கா நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், லைக்கா நிறுவனம் கேட்டுக்கொண்டதால், படத்தின் தயாரிப்புக்கான பட்ஜெட்டை 250 கோடி ரூபாயாக குறைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தை முதலில் திட்டமிட்டபடி தில்ராஜ் தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகிருக்கும் என்றும், பல்வேறு விஷயங்களில் தாமதம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாக இயக்குநர் சங்கர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Discussion about this post