ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் உர்ஜித் பட்டேல். அவரது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான், உர்ஜித் படேல் ராஜினாமாவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக ஐ.ஏ.எஸ் ஒதுக்கீடு பிரிவை சேர்ந்தவரும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பொருளாதார விவகாரத்துறை செயலராக இருந்தவருமான, சக்திகாந்த தாஸ் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version