மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி கடிதம்

தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெறவேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எஸ் வங்கி, வாராக்கடன் அதிகரித்ததால், நிதி நெருக்கடிக்கு ஆளாகி திவாலாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநில அரசுகள் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெற முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி எழுதியுள்ள கடிதத்தில், தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெறவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை திரும்பப் பெறப்பட்டால் வங்கி நடைமுறைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் செய்யப்பட்ட பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும், தனியார் வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version