திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை திமுக கூட்டணி கட்சியான விசிக நிர்வாகி தூண்டுதலின் பேரில் இடித்ததாக புகார் எழுந்துள்ளது. செய்யாறில் திருவந்திபுரம் நகராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகே விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலின் அருகே உள்ள இடம் விசிக மாவட்ட செயலாளர் ஆக்கிரமிப்பில் உள்ளது. மீதி உள்ள இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் அவர் இருந்துள்ளார். ஆகவே, அவரது தூண்டுதலின் பேரில் நான்கு பேர் சேர்ந்து விநாயகர் கோவிலை இடித்துள்ளனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனை அறிந்துகொண்ட இந்து முன்னணியினர் போலிசாருக்கு புகார் அளித்தனர். மேலும் போலிஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே செய்யாறு போலீசாட் இந்து முன்னணியினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்கள். பிறகுதான் இந்து முன்னணியினர் கலைந்து சென்றுள்ளார்கள். இந்தக் கோவில் இடிப்பு சம்பவம் குறித்து செய்யாறு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் பா. முத்துச்சாமியும் புகாரளித்துள்ளார்.
புகாரளித்த நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கோவிலை இடித்தவர்கள் கீழ்புதுப்பாக்கம் காலணியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் நேரு, பாப்பாந்தாங்கல் கிராம காலணியைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் செய்யாறு வைத்தியர் தெருவைச் சேர்ந்த பொன்.மணிகண்டன் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கோயிலை இடிக்கச் சொன்ன விசிக நிர்வாகியை தேடி வருகின்றனர்.
Discussion about this post