ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, மாமனாருக்கு குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார்.
முதுகுளத்தூர் கேளல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசனுக்கு, கோபால், வினோபராஜ் என்ற மகன்களும், வேணி, கோமதி என்ற மகள்களும் உள்ளனர். இதில் வினோபராஜூக்கு கனிமொழி என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முருகேசன் கடுமையான வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, முருகேசனின் வீட்டைச் சுற்றி கோழிகள் இறந்துகிடப்பதை கண்டு சந்தேகமடைந்த வினோபாராஜ், மனைவி கனிமொழியை விசாரித்தபோது, மாமனாருக்கு குழம்பில் விஷம் வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கனிமொழியை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மாமனார் முருகேசன் பாலியல் தொல்லை அளித்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி சாப்பாட்டில் விஷம் வைத்தது தெரியவந்தது.
Discussion about this post