திண்டிவனம் அருகே பள்ளி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று புதுச்சேரியில் வேறொருவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். பெண்ணின் இரு மகள்களும் திண்டிவனத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், அண்டை வீட்டை சேர்ந்த துரை என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
மேலும், அவருடைய மகன் மோகன் மற்றும் மோகனின் நண்பர்களும் சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக தெரியவந்ததையடுத்து, சிறுமிகளை அவர்களின் தாயார் புதுவைக்கு அழைத்து சென்றார். மூத்த சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து ஆசிரியர் விசாரித்தபோது நடந்த கொடூரங்களை சிறுமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Discussion about this post