கன்னியாகுமரி அருகே முகநூல் மூலம் காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்த ஏசுநேசன் என்ற வாலிபர் முகநூல் வழியாக காதலிப்பதாக கூறியுள்ளார். ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான ஏசுநேசனின் தொடர் வற்புறுத்தல் காரணமாக இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியிடம் நேரில் பேச வேண்டும் என ஏசுநேசன் அழைத்துள்ளார். ஏசுநேசனின் திட்டம் தெரியாமல் அங்கு சென்ற மாணவியை ஏசுநேசனும் அவரது நண்பர் ஆதிஸ் என்பவரும் ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நடந்த சம்பவங்களை அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏசுநேசனையும் அவரது நண்பர் ஆதிஸ் ஆகியோரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Discussion about this post