கிருஷ்ணகிரியில் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ஜோதி நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு முகநூல் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறி இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, கோவை சென்றுள்ளனர். கல்லூரி சான்றிதழ்கள் எடுத்து வரவில்லை என தெரிவித்து மாணவி அழைத்துக் கொண்டு சேலம் வந்த பாலன், பேருந்து நிலையத்தில் அவரை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தன்னை பாலன் ஏமாற்றி விட்டதாகவும், தங்கும் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார். தனது மகளின் தற்கொலைக்கு காரணமான பாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post