சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தீபா என்கிற பெண்ணை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது நண்பர் சங்கர் என்பவர், காதலர்கள் இருவரும் தனியாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்டித் தீபாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தீபாவின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகைப்படங்களைச் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார், சங்கர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Discussion about this post