கோவை சிங்காநல்லூரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டித்துரை மற்றும் முருகன். இவர்கள் இருவரும் சிங்காநல்லூர் திருநகர் குடியிருப்பில் கடந்த 4 மாதங்களாக துப்புரவு பணிகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை எடுக்க, கழிவு நீர் தொட்டியில் இறங்கிய போது, இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இருவரின் உடல்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post