பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பழனி பேருந்து நிலையத்திலிருந்து காந்தி மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில், சாக்கடைநீர் தேங்குவதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில், சாக்கடை பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post