வேதாரண்யத்தில் கோடை காலத்தில் அதிக லாபம் கிடைக்குமென விவசாயிகள் எள் சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள ஆயக்கரன்புலம், தென்னாடார், வாய்மேடு மற்றும் மருதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். 2 ஆயிரம் ஏக்கர்களில் நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில், எள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
கோடை காலத்தில் நெல் அறுவடைக்கு பின் வயலில் உள்ள குறைந்த ஈரப்பதத்தினை கொண்டு எள்ளை சாகுபடி செய்துள்ளதாகவும், எள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post