ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பசல்போரா என்னுமிடத்தில் மறைந்திருந்து தாக்கிய தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டதால் தீவிரவாத நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன. இந்நிலையில் அனந்தநாக் மாவட்டத்தின் பசல்போரா என்னுமிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் அவ்வழியாகச் சென்ற காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post