விருதுநகரில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்து 68 சவரன் நகையை மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அந்த நபரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடமிருந்து 68 சவரன் நகையை மீட்ட காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Discussion about this post