10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போடிக்கு நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், அரையிறுதி போட்டியில் உக்ரைனின் ஸ்விட்டோலினாவை 6-க்கு 3, 6-க்கு ஒன்று என்ற நேர் செட்களில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபனில் 10 வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா, இதுவரை 6 முறை பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version