செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த 19 மாதங்களில் இல்லாத வகையில் கடுமையாக சரிந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த 19 மாதங்களில் இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 94 ஆயிரத்து 442 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரி வசூல் இரண்டரை விழுக்காடு வரி வசூல் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 98 ஆயிரத்து 202 கோடி ரூபாயாக இருந்தது. ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட குறைந்த பட்சம் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 19 மாதங்களில் இல்லாத வகையில், ஜிஎஸ்டி வரி வருவாய் கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Discussion about this post