திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணை பதிவாளர், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக, கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி அறிவித்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக நியமித்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அவரது நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்த நீதிபதிகள், மனு குறித்து ஜனவரி 7-ம் தேதிக்குள் பதிலளிக்க, பிரதான மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
Discussion about this post