கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் செந்தில்பாலாஜி மீது, கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் 15 ஆம் தேதி அன்று பிரச்சாரம் செய்வது தொடர்பாக மனு கொடுக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் கூறியதாகவும், அடுத்தநாள் அலுவலகத்துக்கு வர தான் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜி, தனது வீட்டில் அத்துமீறி நுழைய முயன்று, தன்னையும், குடும்பத்தையும் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதை அடுத்து, செந்தில்பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்டோர் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணையின்போது, செந்தில்பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்ட 3 பேர், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை ஜாமின் வழங்கினர்.
Discussion about this post