அணில்கள் மின் கம்பியில் ஓடுவதாலேயே மின்வெட்டு ஏற்படுகிறது என்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை வைத்து, இணையத்தில் பல மீம்ஸ்களும், HASH TAG-குகளும் வைரலாகி வருகிறது…
இது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு…
திமுக ஆட்சி பொறுப்பேற்றுவுடன், அவர்களின் பல சாதனைகளில் ஒன்றான மின்வெட்டு, இப்பொழுது தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
அதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அணில்கள் மின் கம்பியில் ஓடுவதாலேயே மின்வெட்டு ஏற்படுகிறது என்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் லாஜிக் இல்லாத பதில், இணையத்தில் ட்ரெண்டாகி, மீம்ஸ்களையும், ஹாஷ் டேகுகளையும் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அணிலிடம் ஒருவர் கேள்வி கேட்பதுபோல் இருக்கும் இந்த மீமில் : ஆமா 10 வருஷமா அதிமுக ஆட்சியில் ஏன் கரண்ட் கம்பில நீங்க ஓடல…
அதற்கு அணிலின் பதில்: அப்போ எந்த நேரமும் கரண்ட் இருக்கும், இப்போ எப்போதாவது தான் கரண்ட் இருக்கு அதான்…
அடுத்து மீம், வடிவேல் கோவை சரளாவை பார்த்து கேட்கும் ஒரு கேள்வி ; ஏண்டி டிபனுக்கு அணில் சேமியா செய்யாதன்னு எத்தன வாட்டி சொல்றது, இப்ப பாரு வீட்ல கரண்ட் கட் ஆயிடுச்சி…
அதே போல், வடிவேலு ஒருவரை பார்த்து உன் பேர் என்ன என்று கேட்கிறார், அதற்கு அவர், ”அனல் மின் நிலையம் என்று கூறுகிறார்”, அதற்கு வடிவேலு ”இன்னையலிருந்து நீ அனில் மின்நிலையம்” என்று கூறும் மீம்ஸ் ”அனில் தான் காரணம்” என்ற ஹாஷ் டேகில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இதற்கெல்லாம் உச்சமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சின்னத்தில், அனில் படத்தை நடுவில் போட்டு, கிழே உண்மை, உழைப்பு உயர்வு என்று கிண்டலடிதுள்ளனர்.
இதேபோல், இன்னும் பல மீம்களும், ஹாஷ் டேகுகளும், செந்தில் பாலாஜியின் அனில் காமெடியை கிண்டலடித்து வருவது, இணையத்தில் வைரலாகி வருகிறது…
Discussion about this post