இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கிற்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற உத்தரவையும், அவரை பதவி நீக் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததையும் எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த வழக்கு தொடர்ந்திருந்தார்
அனைத்து வழக்குகளிலும் வாதங்கள் நிறைவடைந்த்தை தொடர்ந்து எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.