மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு மற்றும் தியாகி கக்கனின் குடும்பத்தினருக்கும் மாற்று வீடு ஒதுக்கப்படும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதற்கு, பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் தொண்டிற்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயலாற்றி வரும் தலைவர்கள் அனைவரையும், கட்சி வேறுபாடு கருதாது போற்ற வேண்டியது தமிழக அரசின் நீங்காத கடமை என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நல்லதொரு முடிவினை விரைந்து எடுத்து அறிவித்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post