ஸ்மார்ட் வகுப்புகளுக்காக கிராம பள்ளிகளுக்கு கேபிள்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையம் அடுத்த சிறுவலூரில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்றும் அதற்கான முழு தொகையையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கட்டிடங்களுக்கு உள்ளாட்சித் துறையுடன் இணைந்து வெள்ளை அடிக்கப்படும் என்றார்.
வரும் ஆண்டில் யூடியுப் மூலம் பாடங்களை பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர் கிராம பள்ளிகளுக்கு கேபிள்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Discussion about this post