சர்வதேச உணவு உற்பத்தி முறை மற்றும் பதப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி ஆகியோர் கலந்துக் கொண்டு கண்காட்சியை துவங்கி வைத்தனர். விழாவில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது எனவும், விலை இல்லா அரிசி திட்டத்தின் பயனை மக்கள் பெற்று வருவதாகவும் கூறினார்.
நேரடி கொள்முதல் நிலையம் மூலம் அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்வதாக கூறிய அமைச்சர், இந்த ஆண்டில், 5 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். ஆயிரத்து 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உணவை பாதுகாத்து பதப்படுத்த அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
Discussion about this post