சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 191 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் தூர்வாரப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 ஆயிரத்து 645 ஹெக்டர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 536 ஹெக்டர் கொள்ளளவு குறைவாக உள்ளதால் 25 லட்சத்து 30 ஆயிரம் சரக்கு லாரிகளின் மூலம் மணல்கள் வெளியேற்றி தூர்வாரப்பட்டு ஆழத்தை மீட்டு எடுப்பதின் மூலம் 3 ஆயிரத்து 645 ஹெக்டர் முழுமையான கொள்ளளவை அடையும் என்பதையும், இந்த பணி 8 ஆண்டுகளுக்கு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும் செம்பரம்பாக்கம் ஏரி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: செம்பரம்பாக்கம் ஏரி
Related Content
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
By
Web Team
November 18, 2020