ரம்ஜானை முன்னிட்டு நத்தம் சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆகியிருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சுற்றியுள்ள மலை பிரதேசங்களில் இயற்கையாக வளரக்கூடிய தாவரங்களை சாப்பிட்டு வரும் ஆடுகளின் இறைச்சி சுவை மிக்கதாக கருதப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரம்ஜானை பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நத்தம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகளின் விற்பனை நடைபெற்று இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post