கொரோனா தொற்றை தடுக்க பாதுகாப்பான இடைவெளி அவசியம் எனக் கூறிவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினே அவற்றை கடைப்பிடிக்காமல் இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றை வெல்வதற்கு இன்றியமையாததாக பார்க்கப்படுவது, முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவைதான்.
ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மட்டும் விதிவிலக்கா? என கேட்கத் தோன்றும் அளவுக்கு, கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றாமல், இளைஞர் பட்டாளத்துடன் சேர்ந்து விளம்பரத்திற்காக அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சைக்கிளிங் சென்ற ஸ்டாலினுடன், அங்கு அரைகுறை ஆடையுடன் வந்த பெண்கள் மற்றும் இளைஞர் பட்டாளம், செல்ஃபி எடுத்தது.
அப்போது, அங்கு முகக்கவசம் அணியாதவர்களிடம், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடியுங்கள் என எதையும் கூறாமல், இளைஞர்களுடன் சேர்ந்து ஸ்டாலினும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கொரோனாவை தடுக்க சுய கட்டுப்பாடு அவசியம் என இன்றும்கூட சொல்லிவிட்டு, அவற்றை ஸ்டாலினே மதிக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Discussion about this post