மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் மும்பை ஐஐடியின் முன்னாள் மாணவர் கனிஷ்க் கட்டாரியா தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த கனிஷ்க் கட்டாரிய தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி திருஷ்டி தேஷ்முக் பெண்கள் பிரிவில் முதலிடத்தையும், ஒட்டு மொத்த தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளார். மொத்தம் 759 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 577 ஆண்களும் 182 பெண்களும் அடங்குவர். தமிழகத்தைச் சேர்ந்த சி.ஏ ரிசாப் மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 35 இடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் இந்த வருடம் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
Discussion about this post