கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் கூடிய சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட ஊட்டசத்து மிக்க உணவு காட்சி படுத்தப்பட்டிருந்தன.
மேலும், இதில் கம்மாபுரம் வட்டாரத்துக்கு உட்பட்ட 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது கர்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வளையல், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, புடவை உள்ளிட்ட 11 வகையான சீர்வரிசைகளை சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.
பெண்களை பாதுகாக்கவும், பெண் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காவும் செயல்படும் தமிழக அரசுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.