ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

செயின் பறிப்பை தடுப்பதற்காக ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் அனைத்து ரயில்களிலும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஈரோடு வழியாக சேலம் செல்லும் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாவேலிபாளையம் பகுதியில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் அனைத்து ரயில்களும் சென்று வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கடந்த சில நாட்களாக கொள்ளையர்கள் பயணிகளிடம் இருந்து தங்க நகைகளை பறித்தனர்.

இந்த நிலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் வரை ரயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் அனைத்து ரயில்களிலும் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். காவல்துறையினரின் இந்த முடிவு ரயில் பயணிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version