மக்களவை தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல்18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகரில் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் 100 சதவீதம் வாக்காளர்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post